Nov 22, 2024 - 11:33 AM -
0
அஸ்வினி - கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள்.
பரணி - புதிய நண்பர்களால் வரவுகளும் கிடைக்கும். பிரச்சனைகளும் வரும்.
கார்த்திகை - அலைச்சல் அதிகமாகும். பொருள் விரயம் ஏற்படும்.
ரோகிணி - விடாப்பிடியாக வியாபாரத்தை நடத்துவீர்கள்.
மிருகசீரிடம் - குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீர்கள்.
திருவாதிரை - தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம் - நம்பிக்கையானவர் மூலம் பிரச்சனையைச் சமாளிப்பீர்கள்.
பூசம் - அரசாங்க வழியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.
ஆயில்யம் - துணிச்சலுடன் செயல்பட்டு தொழிலில் ஆதாயம் காண்பீர்கள்.
மகம் - மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
பூரம் - சகோதரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
உத்திரம் அவசரப்பட்டு எந்த ஒரு செயலிலும் இறங்கி விட வேண்டாம்.
அஸ்தம் - புதிய திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.
சித்திரை - உறவினரின் பிரச்சினையிலிருந்து ஒதுங்கி இருங்கள்.
சுவாதி - தேவையற்ற குழப்பங்கள் தலைதூக்கி மனதைச் சங்கடப்படுத்தும்.
விசாகம் - அரசு வேலையில் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை வரும்.
அனுஷம் - தொழிலில் ஆதாயம் அதிகரித்து சொத்து சேர்க்கை உண்டாகும்.
கேட்டை - தடைகளை விலக்கி வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
மூலம் - குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பீர்கள்.
பூராடம் - தாய் வழி உறவுகளின் உதவியால் கடன் பிரச்சனை தீரும்.
உத்திராடம் - பிள்ளைகளின் நலனுக்காக புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.
திருவோணம் - குடும்பத்தில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.
அவிட்டம் - இழுபறியான செயல்களை விடாமுயற்சியால் முடிப்பீர்கள்.
சதயம் - தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக ஒழித்துக் கட்டுவீர்கள்.
பூரட்டாதி - திறமையுடன் வேலை பார்த்தாலும் மேலதிகாரி மட்டம் தட்டுவார்.
உத்திரட்டாதி - நீங்கள் எதிர்பார்த்த லோன் வங்கியிலிருந்து கிடைக்கும்.
ரேவதி - அவசியமான வேலையை முடிப்பதற்கு அயல்நாடு செல்வீர்கள்.