Nov 22, 2024 - 11:57 AM -
0
இந்த வாரத்தில் (நவம்பர் 18 முதல் 24 வரை) விருச்சிகத்தில் சூரியனின் பெயர்ச்சி நடந்து, அங்கு புதனுடன் சேர்க்கை நடந்துள்ளது. சுக்கிரன், குரு ஆகிய இரு கிரகங்களும் கிரக பரிவர்த்தனை செய்கின்றனர். இந்த வாரத்தில் கிரக சேர்க்கை, கிரக மாற்றங்களால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்க கூடியதாக இருக்கும். வார தொடக்கத்தில் பதவி உயர்வு, கௌரவம் கிடைக்க போராட வேண்டியது இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 17
ரிஷபம்
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் உங்களின் பேச்சு மற்றும் நடத்தையில் கூடுதல் கட்டுப்பாடு தேவை. வாரத் தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற மனவருத்தம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1
மிதுனம்
மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்ததாக இருக்கும். வார தொடக்கத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாரத்தின் பிற்பகுதியில் புதிய வாகனம், வீடு வாங்க நினைப்பவர்களின் முயற்சிகள் வெற்றி அடையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண் : 14
கடகம்
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வார தொடக்கத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடும். புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தால் எதையும் சமாளிப்பீர்கள். உங்களின் நிலுவையில் உள்ள பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
சிம்மம்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்களுக்கு கிடைக்கும். வார தொடக்கத்தில் உங்கள் செயலில் அலைச்சலும், வேலை முடிப்பதில் தாமதமும் ஏற்படும். இந்த வாரத்தில் வீடு பழுது பார்த்தல், இடமாற்றம் போன்ற செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 6
கன்னி
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் கலகலப்பு நிறைந்ததாக இருக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வணிகம் தொடர்பாக லாப வாய்ப்புகள் உண்டு. புதிய முதலீடுகள் லாபத்தை தர வாய்ப்புள்ளது. குழந்தைகள் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண் : 18
துலாம்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். வர தொடக்கத்தில் பணியிடத்தில் சில மாற்றங்கள் அல்லது கூடுதல் பொறுப்புகள் சுமக்க நேரிடும். வணிக நடவடிக்கைகளில் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
விருச்சிகம்
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரத்தில் சில நல்ல செய்திகளுடன் தொடங்கும். உங்கள் வேலையில் பெரிய சாதனையை படைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சொத்து வாங்கும் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 7
தனுசு
தனுசு ராசி சிறந்தவர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் தீர்க்க அதிக அளவில் ஏற்படும். உங்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து வாங்குதல், விற்பது தொடர்பாக ஒப்பந்தங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 15
மகரம்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரத்தில் மிகவும் மங்களகரமானதாகவும், வெற்றிகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். வார தொடக்கத்தில் ஆன்மீகம் அல்லது சுப நிகழ்ச்சிகளில் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. நிலம், வீடு, வாகனம் வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
கும்பம்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு எந்த வேலையிலும் அவசரமோ அல்லது அலட்சியமாக ஈடுபடக்கூடாது. பணியிடத்தில் உங்கள் பொறுப்புக்களை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்களின் வழக்கமான செயலிலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 12
மீனம்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு எந்த வாரத்தில் நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். வார தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க நல்லுறவு மேம்படும். சொத்து வாங்கும் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2