விளையாட்டு
10 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

Nov 24, 2024 - 10:19 AM -

0

10 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 2 ஆவது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2 ஆவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 193 பந்துகளில் 90 ஓட்டங்களை பெற்று ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

 

இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பிரெண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

 

2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை 34 சிக்ஸர்கள் அடித்து ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

 

ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்,

 

மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014)

 

பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள் (2022)

 

கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005)

 

வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008)

Comments
0

MOST READ