Nov 24, 2024 - 10:38 AM -
0
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து பாலிவுட் படங்கள் வாய்ப்பும் வந்தது.
கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. புஷ்பா 2, Chhaava, ரெயின்போ, தி கேர்ல்ஃப்ரெண்ட், சிகண்டா, தாமா போன்ற பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்று வருகிறார் ராஷ்மிகா.
இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் ரகசியமாக டேட்டிங் சென்று வருவதாகவும் செய்திகள் கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வண்ணம் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா ஓட்டலில் சாப்பிடும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வருகிறது.