வடக்கு
மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையடிய மீன்பிடி அமைச்சர்!

Nov 24, 2024 - 12:19 PM -

0

மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையடிய மீன்பிடி அமைச்சர்!

மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் மீன்பிடி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. 

 

கலந்துரையாடலில் அண்மையில் புதிதாக மீன்பிடி அமைச்சராக பதவியேற்றிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்தார்.

 

இதேவேளை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மீன்பிடி தெளிவுபடுத்தினர்.

 

இதன்போது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக மீனவர்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு மீன்பிடி  அமைச்சர் உறுதி அளித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05