வடக்கு
மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்!

Nov 24, 2024 - 01:21 PM -

0

மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்!

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என மன்னார் வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி தர்மரட்ணம் பிரதீபன் தெரிவித்தார்.

 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை சுற்றி வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது.

 

இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று நம்பப்படுகிறது.

 

காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்ப்பரப்புக்களிலுள்ள மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05