வடக்கு
மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்!

Nov 24, 2024 - 02:52 PM -

0

மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நேற்று (23) மாலை 6 மணியளவில் கல்வெட்டுக்கள் அடங்கிய நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

 

குறித்த நினைவாலயம் நவம்பர் 27 ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

 

1982 கார்த்திகை 27 இலிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் எமக்கு விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05