Nov 24, 2024 - 04:12 PM -
0
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று (23) இரவு 7 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் கொண்டு செல்வதற்காக முயற்சித்த போது குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
பயண பொதியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கிலோவும் 750 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் 64 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.