மலையகம்
போதை பொருள் தயாரித்து விற்பனை செய்தவர் கைது!

Nov 26, 2024 - 04:12 PM -

0

போதை பொருள் தயாரித்து விற்பனை செய்தவர் கைது!

நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள என்.சி போதை பொருள் தயாரிப்பதற்கான திரவிய பொருட்கள் ஐந்து கிலோவுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு விற்பனை செய்யும் நோக்கிலேயே என்.சி போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 

ஹட்டன் காமினிபுர பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஹட்டன் நகரில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் குறித்த நபர் இளைஞன் ஒருவருக்கு என்.சி போதை பொருளை விற்பனை செய்த போதே கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டை சோதணையிட்ட போது அவரது வீட்டில் என்.சீ. போதை பொருள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை தூள் உள்ளிட்ட 5 கிலோ 750 கிராம் திரவிய பொருட்களை மீட்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05