Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள்

Nov 26, 2024 - 06:15 PM

திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள்
Mobitel Inner 1278

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உற்பத்தித் திகதி மற்றும் அது தொடர்பான தகவல்களை மாற்றியமைத்து,  இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பை  சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.


நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் நேற்று (25) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


அங்கு, இந்தியாவில் பொதி செய்யப்பட்ட 25 கிலோ அரிசி மூடைகளில் உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள உற்பத்தி திகதி ஜனவரி 2022 என பொறிக்கப்பட்டுள்ளதோடு, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், இலங்கையில் இருந்து அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர், பொதி தயாரிக்கும் திகதியை ஜூன் 2024 என மாற்றி அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.


மேலும், அரிசிப் பொதிகளில் அச்சிடப்பட்ட விலை மற்றும் நிறைகள் என்பன மாற்றப்பட்டு கொழும்பு 14 பகுதியிலுள்ள களஞ்சியசாலையில் இரகசியமாக வைக்கப்பட்டு எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​உற்பத்தித் திகதி மாற்றப்பட்ட 25 கிலோகிராம் அரிசி பொதிகள் 717 நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பொதியிடல் குறித்த தகவல்கள் ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா என ஆராய்ந்து, அவ்வாறான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை 1977 ஆம் என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278