Nov 26, 2024 - 08:09 PM -
0
சர்ச்சைக்குரிய E-8 வீசா முறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சோதனைப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்ட 'அத தெரண உகுஸ்ஸா' கண்டுபிடித்தது.
E-8 வீசா முறையின் கீழ் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பணமோசடி மோசடியில் ஈடுபட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சோதனைப் பிரிவுக்கு இரண்டு நபர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அவர்களிடம் இருந்து சுமார் 12 இலட்சம் ரூபாவை மோசடியாளர்கள் பறித்துச் சென்றதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, "அததெரண உகுஸ்ஸா"வையும் இணைத்துக்கொண்டு மேற்படி மோசடி தொடர்பில் சோதனை பிரிவு விசாரணையை தொடங்கியது.
விசாரணை அதிகாரிகளால் பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்திற்கு மோசடி செய்த இருவரையும் நுட்பமாக கொண்டு வர முடிந்தது.
இதன்போது, விரைந்து செயல்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்தனர்.
யக்கல மற்றும் கலகெதர பிரதேசத்தை சேர்ந்த இவர்களை விசாரணை செய்த போது கொட்டாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விசாரணை அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்ய அங்கு சென்று கொண்டிருந்த போது, முகவர் ஒருவர் ஊடாக பெண்ணுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த போதிலும், அவர் வீட்டில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை என்று வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
எனினும், வீட்டில் பதுங்கியிருந்த குறித்த பெண்ணை விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் தெரிவித்த தகவலின்படி, கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு கும்பலை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.