செய்திகள்
நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை காணவில்லை

Nov 26, 2024 - 08:53 PM -

0

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை காணவில்லை

காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் ​போயுள்ளனர்.


மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.


பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.

 

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05