Nov 26, 2024 - 10:21 PM -
0
கடந்த 24 மணித்தியாலங்களில் 250 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்து வருவதால், கண்டி மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தளை மாவட்டத்தில் 09 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டது.
மழை தொடர்ந்தால் நிலச்சரிவுகள், மண்மேடு இடிந்து விழுதல், மற்றும் பாறைகள் விழுதல் ஆகியவற்றை தவிர்க்க பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கண்டி மாவட்டம் - ஹாரிஸ்பத்துவ, மெததும்பர, கங்கவட கோரலய, உடுதும்பர, தொலுவ, யட்டிநுவர, உடபலாத, பாதஹேவஹட, உடுநுவர, பாததும்பர, தெல்தொட்டை
மாத்தளை மாவட்டம் - உக்குவெல, யடவத்த, ரத்தோட்ட, வில்கமுவ, அம்பங்கங்க கோரலய, லக்கல, பல்லேகம, பல்லேபொல, நாவுல, மாத்தளை
நுவரெலியா - வலப்பனை