Nov 27, 2024 - 06:25 PM -
0
மட்டக்களப்பில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன் பல வீதிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளத்தினால் சிக்கியவர்களை படகு மற்றும் உழவு இயந்திரங்களின் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நகரை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கான படகு சேவை இடம்பெற்று வருகின்றது.
சீரற்ற கால நிலை காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் மற்றும் ஆறுகள் நிறைந்து வெள்ள நீரில் மூழ்கி வெள்ள காடாகியது.
இந்த வெள்ளத்தினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்திற்கும், வவுணதீவுக்கும் புதூர் மற்றும் மட்டக்களப்பு நகருக்கும், மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும், மட்டக்களப்பு செங்கலடிக்கும் சித்தாண்டிக்கும் மற்றும் பட்டிருப்புக்கும் போரதீவுக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளுக்கிடையிலான படகு சேவையை ஆரம்பிக்கப்பட்டது.
அதேவேளை வெள்ளத்தினால் மட்டக்களப்பு புளியந்தீவை சுற்றிய களக்பை அண்டிய வாவிக்கரை வீதிகள் உள்ள பகுதிகள்,கோட்முனை, ஊறணி, இருதயபுரம், மாமாங்கம் போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மட்டக்களப்பு பொதுசந்தைகட்டிடம், மாநகரசபை, பிரதான பஸ்தரிப்பு நிலையம், தனியர் பஸ்தரிப்பு நிலையம் விமான நிலையம், மற்றும் தாழ்நில பகுதிகளிலுள்ள வர்தகநிலையங்கள் வெள்ளத்தினால் முழ்கியது.
இதனையடுத்து துர இடங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் நகர் செயல் இழந்துள்ளதுடன் மட்டக்களப்பு கல்முனைக்கும் இடையிலான கல்லடி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
--