சினிமா
'96' படத்தின் இரண்டாம் பாகம்

Nov 28, 2024 - 01:47 PM -

0

'96' படத்தின் இரண்டாம் பாகம்

'96' படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற '96' படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.


'96' படத்தைப்போல மனித உறவுகளை அழகாகக் கையாண்ட திரைப்படமாக 'மெய்யழகன்' ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.


இப்படத்தைத் தொடர்ந்து, பிரேம் குமார் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்த நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - த்ரிஷாவை வைத்து '96' படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம் குமார் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ