விளையாட்டு
சாம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றம்?

Nov 28, 2024 - 03:00 PM -

0

சாம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றம்?

9 ஆவது ஐ.சி.சி. ஒருநாள் சாம்பியன்ஸ் கிண்ண போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து (ஏ பிரிவு) அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகியவை தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.

 

பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்ட வட்டமாக தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும் (ஐ.சி.சி.) இதை கூறிவிட்டது.

 

இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் இந்தப் போட்டி குறித்து எந்த முடிவும் தெரியாத நிலையில் இருந்தது.

 

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட அரசியல் கலவரம் காரணமாக இந்த தொடர் அங்கிருந்து மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இலங்கை 'ஏ' அணி பாகிஸ்தான் 'ஏ' அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக அங்கு சென்றது. முதல் போட்டி முடிந்த பிறகு வன்முறை காரணமாக பாகிஸ்தானில் இருந்து இலங்கை அணி பாதியில் திரும்பி விட்டது.

 

பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளன. இதனால் சாம்பியன்ஸ் கிண்ண அங்கு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ஐ.சி.சி. கூட்டம் நாளை (29) நடந்தப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி குறித்து முடிவு செய்யப்படும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05