வடக்கு
குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு!

Nov 28, 2024 - 05:24 PM -

0

குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா - மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது. 

 

கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார். 

 

இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். எனினும் மூன்று நாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கபபடவில்லை.

 

இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் அந்த குளத்தில் இருந்து இன்றுகாலை மீட்கப்பட்டது. 

 

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05