Nov 28, 2024 - 06:50 PM -
0
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3,812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 13 இடைத்தங்கல் முகாம்களில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
2,098 குடும்பங்களைச் சேர்ந்த 6,570 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
--