Nov 28, 2024 - 09:25 PM -
0
மாவீரர் நாளை முன்னிட்டு நேற்று (27) வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று இருந்தன.
அதன்படி சாட்டி, கோப்பாய், கம்பர்மலை, வல்வெட்டித்துறை, நல்லூர் பகுதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடம், கொடிகாமம் மற்றும் எல்லங்குளம் ஆகிய பகுதிகளில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் தினமான நேற்றையதினம் பல இடங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர்களுக்கு ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிட்டதக்கது.
--