ஜோதிடம்
திருமண வாழ்க்கையில் சிறந்த ஜோடியாக இருக்கும் ராசிகள்!

Nov 28, 2024 - 09:47 PM -

0

திருமண வாழ்க்கையில் சிறந்த ஜோடியாக இருக்கும் ராசிகள்!

நம்முடைய வாழ்க்கையில் சில தம்பதிகள் பல ஆண்டு காலம் மிகவும் அன்னியோன்னியமாக, பிறர் பொறாமை படக்கூடிய அளவு மிகவும் சிறந்த தம்பதிகளாக வாழ்வதை கொண்டிருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும், கரையும் நிறைந்தவர்களாகப் பிறந்த ஜோடிக்கு தகுதியானவர்களாக இருக்கக்கூடிய ராசிகள் யார் என்று தெரிந்து கொள்வோம்.

 

மேஷ ராசி

 

மேஷ ராசி பிறந்தவர்கள் தன் துணையிடம் மிகுந்த அக்கறையுடனும், அன்புடனும் இருப்பார்கள். தங்கள் துணைக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களாகவும், உணர்வு ரீதியாக பிணைப்புடன் இருப்பார்கள். மேஷ ராசிக்கு கோபம் சற்று அதிகமாக வரும் என்றாலும், தன் துணை மீது மிகுந்த அக்கறையுடன் செயல்படுவார்கள். காதல் அல்லது திருமண வாழ்க்கையில் மிகுந்த நேர்மையுடன் இருக்கக்கூடிய நபர்களாக மேஷ ராசியினர் நடந்து கொள்வார். உறவு வலுப்பட எந்தெந்த விஷயங்கள் செய்ய வேண்டும் இந்த எல்லா விஷயங்களையும் சிறப்பாக செய்யக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.

 

ரிஷப ராசி

 

ரிஷப ராசி சேர்ந்தவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் உறவுகளை வலுவாக கையாள்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள். தன் துணையை மிகவும் அதிகமாக நேசிக்க கூடிய ரிஷப ராசியினர், அவர்களை ஆனந்தமாகவும், ஆடம்பரமாகவும் வாழ நினைப்பார்கள். மேலும் தன் துணை உடன் நீண்ட நேரம் செலவிட நினைக்கக் கூடிய நபர்களாக இருப்பார்கள். ​சுக்கிரனை அதிபதியாக கொண்ட இவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியாக புரிதல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

 

மகர ராசி

 

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசியினர் உணர்ச்சி பூர்வமான நபர்களாக இருப்பார்கள். தன் திருமண வாழ்க்கையில் தன்னுடைய துணைக்கு சிறந்த துணையாக விளங்கக்கூடிய நபர்களாக இருப்பார்கள். கடின உழைப்பாளிகளான இவர்கள் தன் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். சனியின் குணமான கடின உழைப்பு, நேர்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

Comments
0

MOST READ