கிழக்கு
வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு!

Nov 29, 2024 - 03:28 PM -

0

வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு!

வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு  துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை, நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் இவ்வாறு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

 

நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மத்ரசாவில் கல்வி கற்று மரணமடைந்த மாணவர்களின் மறுவாழ்விற்காக துக்கம் அனுஸ்டிக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டது. நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மத்ரசா மாணவர்களுக்கும் கால நிலை சீற்றத்தின் காரணமாக மத்ரசாவினால் கடந்த  26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு இமாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் அகப்பட்டு மரணமடைந்த சம்பவமானது முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் இம்மாணவர்களின் தவிர்க்க முடியாத இழப்பின் காரணமாக துக்கத்தினை வெளிப்படுத்தும் நோக்குடன் சமூக நலன் விரும்பிகளால் வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05