Nov 29, 2024 - 03:37 PM -
0
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 4,155 குடும்பங்களைச் சேர்ந்த 13,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (29) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,139 குடும்பங்களைச் சேர்ந்த 3,903 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 2,141 குடும்பங்களைச் சேர்ந்த 6,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 700 குடும்பங்களைச் சேர்ந்த 2,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மகள்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
--