Nov 29, 2024 - 10:30 PM -
0
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கம் நாட்டின் வானிலை அமைப்பில் இன்றைய நாளின் பின்னர் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 463,569 ஆகும்.
இதேவேளை, விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புக்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த சில மணி நேரங்களில் புயலாக உருவாகி தமிழகத்தின் கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

