செய்திகள்
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!

Nov 30, 2024 - 08:13 AM -

0

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

இதன்படி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05