செய்திகள்
STFஇற்கு அவப்பெயரை ஏற்படுத்த பாதாள உலக குழுக்களின் புதிய யுக்தி..!

Nov 30, 2024 - 02:55 PM -

0

STFஇற்கு அவப்பெயரை ஏற்படுத்த பாதாள உலக குழுக்களின் புதிய யுக்தி..!

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை எதிர்த்துப் போராடுவதில் தனித்துவமான பங்கை வகிக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் உள்ள உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சமூக ஊடக நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.


விசேட அதிரடிப்படையில் உள்ள உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கு தேவையான சூழலை உருவாக்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.


இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதில் தனித்துவமான பங்கை வகிக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் ஏராளமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.


ஹெராயின் 350 கிலோகிராம், 140 கிலோ ஐஸ் போதைப்பொருள், 6,860 கிலோகிராம் கேரள கஞ்சா உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போது, மீகொட பிரதேசத்தில் "உனகுருவே ஷாந்த" என்பவருக்கு சொந்தமான ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.


மேலும், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த பலரைக் கைது செய்து, தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதன் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ரத்கம விதுர, ஷிரான் பாசிக், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் மகன் மலிஷ குணரத்ன, பெலாரஸில் கைது செய்யப்பட்ட லொக்கு பெட்டி, படுவத்த சாமர மற்றும் கஞ்சிபானி இம்ரான் ஆகியோர் தலைமையில் சுமார் 6 கோடி ரூபா செலவில் சமூக ஊடக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.


வெளிநாட்டில் இருந்து பல யூடியூப் சேனல்களை நடத்தி வரும் குழுவிடம் பணத்தை கொடுத்து சமூகத்தின் நம்பகத்தன்மையை உடைக்கும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் செயலில் உள்ள அதிகாரிகள் குறித்து பொய்யான செய்திகளை பரப்புமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த அதிகாரிகள் தொடர்பில் சமூகத்தில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அவர்களை இடமாற்றம் செய்து நாட்டில் தடையின்றி தமது கடத்தல் நடவடிக்கைகளை தொடர்வதே போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் இலக்கு எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05