Nov 30, 2024 - 03:51 PM -
0
இந்த நாட்டில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை முதன்மையாகக் கொண்டுள்ள "மனுசத் தெரண", இம்முறையும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது.
"மனுசத் தெரண" டயலொக் நிறுவனத்துடன் கைகோர்த்து இன்று (30) இரண்டாவது நாளாக இந்த நடவடிக்கையை ஆரம்பித்தது.
இந்த நாட்டில் அனர்த்தம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் "மனுசத் தெரண" எமது மக்களை ஆறுதல்படுத்தும் நோக்கில் நிவாரணம் வழங்கி தனது கடமையை நிறைவேற்றி வருகிறது.
அதற்கமைய, வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களுடன் மனிதாபிமான உதவிக் குழுக்கள் அண்மையில் வவுனியா நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக எமது குழு வவுனியா மாவட்டத்தில் காலடி எடுத்து வைத்தது.
இவர்களுக்கு சமைப்பதற்கான உலர் உணவுப் பொருட்கள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் வழங்கப்பட்டன.
"மனுசத் தெரண" வவுனியா குருக்கள் புதுக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிற்குச் சென்று அங்கு தங்கியிருந்த மக்களுக்கு சமைப்பதற்கு உலர் உணவுப் பொருட்களையும் வழங்கியது.
பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க "மனுசத் தெரண" டயலொக் உடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளது.

