வடக்கு
உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகள்!

Nov 30, 2024 - 06:56 PM -

0

உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் குறித்த உலருணவுப் பொதிகள் சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாதுகாப்பாக மக்களை தங்கவைத்துள்ள இடைத்தங்கல் முகாமில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

 

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜினி முகுந்தன், மண்முனை வடக்கு உதவி  பிரதேச செயலாளர் சுபா சுதாகரன், அப்பகுதிக்கான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 102 நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

 

குறித்த நிவாரண பொதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05