வடக்கு
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி!

Nov 30, 2024 - 07:56 PM -

0

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி!

இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ். மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் " யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 " கார்த்திகை 30 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 4 ஆம் திகதி வரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பளஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

 

இப்போட்டியில் சுமார் 750 இற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள் இந்தியா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்போட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

 

இப்போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இரண்டாவது சர்வதேச சதுரங்க போட்டி. சென்ற வருடம் முதலாவது  போட்டியை மிகச் சிறப்பாக நாம் நடாத்தி இருந்தோம். இப் போட்டியானது எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்கள் சர்வதேச தரத்தை அதிகரித்துக் கொள்ள உதவுவதோடு பல சதுரங்க வீரர்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கின்றது.

 

போட்டியின் இன்றைய தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக ஆளுநர் நா.வேதநாயகம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும் கலந்து கொண்டார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05