செய்திகள்
மற்றொரு சந்தேகத்திற்கிடமான வாகனம் சிக்கியது

Dec 1, 2024 - 01:04 PM -

0

மற்றொரு சந்தேகத்திற்கிடமான வாகனம் சிக்கியது

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொல்கஸ்சோவிட்ட பகுதியில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றிலிருந்து  லேண்ட் ரோவர் ஜீப் வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

 

வாகன பழுதுபார்க்கும் நிலைய உரிமையாளரிடம் வினவிய போது, ​​சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மஹரகம பிரதேசத்தில் உள்ள விகாராதிபதி ஒருவரினால் லேண்ட் ரோவர் ரக ஜீப், வண்டி, செஸி, நான்கு டயர்கள் மற்றும்  பழைய இயந்திரம் என்பன கொண்டு வந்து தரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

காரை பழுதுபார்ப்பதற்கு தேவையான உதிரிபாகங்களை அவர் அவ்வப்போது கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அதன்படி, இந்த காரை குறித்த இடத்திற்கு வழங்கியதாக கூறப்படும் விகாராதிபதியிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

தற்போது, ​​குறித்த ஜீப் வண்டி மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ