Dec 2, 2024 - 12:29 PM -
0
இசுறுபாய முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை - கொட்டாவ 174 பஸ் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் கற்பித்து வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தங்களை ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.