செய்திகள்
இசுருபாய ஆர்ப்பாட்டம் - காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ICUவுக்கு மாற்றம்

Dec 2, 2024 - 03:32 PM -

0

இசுருபாய ஆர்ப்பாட்டம் - காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ICUவுக்கு மாற்றம்

இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சுக்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் காயமடைந்துள்ளனர்.


இந்நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவசர  சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


சம்பவம் தொடர்பில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.


பின்னர், ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் முற்பட்ட வேளையில், அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05