Dec 3, 2024 - 12:37 PM -
0
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் பொதுமக்களிடம் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை கையளிக்குமாறு தெரிவித்த நிலையில், சில நாட்களாக நுவரெலியா பிரதேச செயலகத்தின் முன்னால் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்வதற்கு சுமார் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிரதேச செயலாளர் பிரதீப் தனன்சூரியவிடம் வினவிய போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நலன்புரி கொடுப்பனவு இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தனர். அவ்வாறு வருகை தந்திருக்கும் போது ஒரு சில நபர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அவ்வாறே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதற்கு நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு வர வேண்டிய கட்டாய தேவை இல்லை.
மக்களுக்கு தேவையான விண்ணப்பங்களை அவர்கள் வசம் உள்ள கிராம சேவகர் உத்தியோகஸ்தர்கள் மூலம் பெற்றுக்கொண்டு அதனை அவர்களுக்கே திருப்பி செலுத்த முடியும். அல்லது இதன் பிரதிகளை கடைகளின் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக காணப்படுகிறது.
ஆகவே மக்கள் இவ்வாறு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து அலைச்சல் பட தேவை இல்லை என தெரிவித்தார்.
--