Dec 3, 2024 - 01:53 PM -
0
பாராளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பில் நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.