Dec 3, 2024 - 03:57 PM -
0
‘Clean Srilanka’ நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் அதன் நிர்வாகத்திற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டரிசி உள்ளிட்ட அரிசியின் அண்மைய தட்டுப்பாடு மற்றும் நெல் விவசாயிகளைப் பாதித்த சீரற்ற வானிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2024 டிசம்பர் 20 வரை இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதி பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…