செய்திகள்
மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு

Dec 4, 2024 - 02:07 PM -

0

மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று (4) காலை மரக்கறிகளின் விலை இவ்வாறு பதிவாகியிருந்தது.


கெரட் 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 50 ரூபா - தற்போதைய விலை 120 ரூபா


போஞ்சி 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 250 ரூபா - தற்போதைய விலை 900 ரூபா


கறிமிளகாய் 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 500 ரூபா - தற்போதைய விலை 700 ரூபா


கோவா 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 30 ரூபா - தற்போதைய விலை 130 ரூபா


லீக்ஸ் 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 130 ரூபா - தற்போதைய விலை 250 ரூபா


​இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் பொருளாதார ரீதியாக தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05