Dec 4, 2024 - 04:46 PM -
0
டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணையின்றி நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) தீர்ப்பளித்தது.
நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கலால் வரி நிலுவையை செலுத்தாவிட்டால், தனது நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் வெளியிட்டுள்ள கடிதத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உத்தரவிடுமாறு டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் இந்த மனு தாக்கல் செய்திருந்தது.
சோபித ராஜகருணா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நீண்ட கால விசாரணையின் பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

