Dec 4, 2024 - 05:23 PM -
0
சர்வதேச கிரிக்கட் பேரவை வௌியிட்டுள்ள புதிய டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தரவரிசையில் 9வது இடத்தில் இருந்த அவர், கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர்.