செய்திகள்
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Dec 4, 2024 - 06:37 PM -

0

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றில்  வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இன்று (04) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது.

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05