Dec 5, 2024 - 08:36 AM -
0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சிம்பாம்வேவுக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த தொடரில் முதலில் T20 போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான T20,டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.