செய்திகள்
பெருந்தோட்ட அமைச்சின் மீளாய்வு கலந்துரையாடல்!

Dec 5, 2024 - 11:14 AM -

0

பெருந்தோட்ட அமைச்சின் மீளாய்வு கலந்துரையாடல்!

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றது.

 

அமைச்சின் அலுவலகதில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய பொருளாதாரத்திற்கு மேலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கு இந்த நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், திறமையான பொது சேவையின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் போன்ற விடயங்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை முக்கியமாக கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

 

கலந்துரையாடலில் அமைச்சர் திரு K. V சமந்த விதயாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர், தென்னை பயிர்ச்செய்கை சபை பிரதிநிதிகள், தென்னை அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகள், தென்னை ஆராய்ச்சி மையம் பிரதிநிதிகள், கப்ருகா நிதி பிரதிநிதிகள், பனை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள், கித்துள் அபிவிருத்திச் சபை பிரதிநிதிகள், இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம் பிரதிநிதிகள் மற்றும் மசாலா மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் வாரியம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05