விளையாட்டு
இந்திய அணியில் 3 மாற்றங்கள்!

Dec 6, 2024 - 09:58 AM -

0

இந்திய அணியில் 3 மாற்றங்கள்!

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 2 ஆவது டெஸ்ட் அடிலெய்டில் பகல் - இரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்த நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

 

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மாவும் அணியில் இணைந்துள்ளனர். படிக்கல், ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

 

முதல் டெஸ்டில் விளையாடாத ரோகித் சர்மா, 2 ஆவது டெஸ்டில் விளையாடுகிறார்.

முதலில் துடுப்பாடி வரும் இந்திய அணி சற்றுமுன் வரை 1 விக்கெட்டை இழந்து 10 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05