செய்திகள்
பண மோசடியில் ஈடுபட்டவர் சிக்கினார்

Dec 6, 2024 - 02:19 PM -

0

பண மோசடியில் ஈடுபட்டவர் சிக்கினார்

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு ஒருவரை ஏமாற்றி இந்த பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வாறு 05 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை சந்தேகநபர்  மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டுள்ளவர் 22 வயதான திகன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05