செய்திகள்
ரக்பி சம்மேளனத்திற்கு எதிரான மனு சமரசம்

Dec 6, 2024 - 02:37 PM -

0

ரக்பி சம்மேளனத்திற்கு எதிரான மனு சமரசம்

இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (5) சமரசம் செய்யப்பட்டுள்ளது.

 

மேல் மாகாண ரக்பி சங்கத்தின் செயலாளர் ரொஷான் டீனினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.

 

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.

 

அதற்காக ரக்பி சங்கம் மற்றும் ஒலிம்பிக் குழு உறுப்பினர் உட்பட மூவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது என்றார்.

 

தேர்தலுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கு இந்த குழு ஒப்புதல் அளித்ததன் பின்னர் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

 

அந்த அதிகாரிகளைத் தெரிவு செய்ததன் பின்னர், ரக்பி சம்மேளனத்தின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

 

இரு தரப்பினரும் இதற்கு இணக்கம் தெரிவித்ததால் குறித்த மனுவை சமரசம் செய்ய உத்தரவிடப்பட்டது.

Comments
0

MOST READ