Dec 7, 2024 - 09:00 AM -
0
இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று (06) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களை பெற்றது. நிதிஷ் ரெட்டி 42 ஓட்டங்களை எடுத்தார்.
அவுஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை அவுஸ்திரேலியா தொடங்கியது. கவாஜா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலியா 1 விக்கெட்டுக்கு 86 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மெக்ஸ்வீனி 38 ஓட்டங்களிலும், புஸ்சேன் 20 ஓட்டங்களிலும் எடுத்து களத்தில் உள்ளனர்.
அவுஸ்திரேலியா இன்னும் 94 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய பும்ரா இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 விக்கெட் எடுத்த 3 ஆவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா சமன் செய்தார்.
இதற்கு முன் 1979, 1983 ஆம் ஆண்டுகளில் கபில் தேவ் 2 முறை 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த சாதனையை முதல் முறையாக படைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜாகிர் கான் 2002 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர்களுக்கு பின்னர் இப்போது தான் பும்ரா 22 வருடங்கள் கழித்து ஒரே வருடத்தில் 50 விக்கெட் எடுத்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.