செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Dec 7, 2024 - 04:53 PM -

0

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

ஜா-எல, ஏக்கல, க்ரூஸ்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


அத்துடன், அந்த வீட்டின் உரிமையாளரான 38 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சந்தேகநபரின் வீட்டின் படுக்கையறை ஒன்றில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் இதற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.


நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சந்தேகநபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Comments
0

MOST READ