சினிமா
"ஹீரோக்களை விட அதிகம் அதனால் பாதிக்கப்படுவது ஹீரோயின்கள்தான்"

Dec 7, 2024 - 09:41 PM -

0

"ஹீரோக்களை விட அதிகம் அதனால் பாதிக்கப்படுவது ஹீரோயின்கள்தான்"

ஓ மை கடவுளே, லாக்கப், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் வாணி போஜன்.


சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சமீபத்தில் ராதாமோகன் இயக்கத்தில் 'சட்னி சாம்பார்' வெப் தொடரில் நடித்திருந்தார்.


தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வாணி போஜன், புகைப்படங்களை எடிட் செய்து சிலர் பதிவிடுவதால் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், "சமூகவலைதளத்தில் புகைப்படங்களை எடிட் செய்து சிலர் பதிவிடுகின்றனர். அதை பார்த்து மக்கள் உண்மை என நம்பிவிடுகின்றனர். ஆனால், அது உண்மையில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது என்னவோ நாங்கள்தான். இது ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05