Dec 7, 2024 - 10:52 PM -
0
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய நாளின் ஆட்டநேர நிறைவில் தென்னாபிரிக்க அணி 3 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பாக மாக்ரம் 55 ஓட்டங்களையும், அணித்தலைவர் பவுமா ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 358 ஓட்டங்களையும், இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 328 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, தென்னாபிரிக்க அணி தற்போது இலங்கை அணியை விட 221 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.