Dec 8, 2024 - 11:10 AM -
0
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே Adelaide மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கட்டுக்களினால் அபார வெற்றியை பெற்றுள்ளது.
போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 180 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 337 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவை விட 157 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி இன்றைய 3ஆம் நாளில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 19 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியாவின் இந்த வெற்றியின் ஊடாக 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.