Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
15 இலட்சம் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

Dec 8, 2024 - 01:23 PM

15 இலட்சம் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!
Mobitel Inner 1278

மாதம்பை பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி மற்றும் பல வகையான மட்டிகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இவ்வாறு வலம்புரி சங்கு மற்றும் ஒருதொகை மட்டிகள் என்பன இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை விமானப்படையின் புலனாய்வு அதிகாரிகளின் இதனை உறுதிப்படுத்தியதன் பின்னர், குறித்த பொருட்களை சந்தேக நபரிடமிருந்து கொள்வனவு செய்யும் நோக்கில் தம்மால் நியமிக்கப்பட்ட முகவர்களை வைத்து  மாதம்பே பிரதேசத்தில் சந்தேக நபரை கைது  செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து விற்பனை செய்வது மற்றும் தம் வசம் வைத்திருப்பதற்கு தடைசெய்யப்பட்ட KING CONCH SEASHELL வகையைச் சேர்ந்த மட்டிகளும், CHIRAGA SPIDER CONEH வகையைச் சேர்ந்த வலம்பரி சங்கு ஒன்றும், இன்னும் சில மட்டிகளும் (நத்தை) காணப்பட்டதாக இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து அவர் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  வலம்புரி சங்கு உட்பட மட்டிகள் , மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக ஆனவிழுன்தாவ வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
08
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

Sep 22, 2026 - 05:12 PM

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278