Dec 8, 2024 - 01:28 PM -
0
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளையும் அதிலிருந்த 8 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
--

